Home உலகம் பணயக்கைதிகளை சவப்பெட்டிகளுக்குள் தான் அனுப்புவோம்: மிரட்டுகிறது ஹமாஸ் !

பணயக்கைதிகளை சவப்பெட்டிகளுக்குள் தான் அனுப்புவோம்: மிரட்டுகிறது ஹமாஸ் !

0

பணயக்கைதிகளை ராணுவ நடவடிக்கை மூலம் விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு (Neyanyahu) தொடர்ந்து வலியுறுத்தினால் அவர்கள் சவப்பெட்டிகளுக்குள் தான் குடும்பங்களுக்குத் திரும்பி அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் (Hamas) தரப்பு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், கைதிகளின் பரிமாற்ற ஒப்பந்தத்தை வேண்டுமென்றே தடை செய்ததால் கைதிகளின் மரணத்திற்கு நெதன்யாகுவும், இஸ்ரேல் ராணுவமும்தான் முழு பொறுப்பு என ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேடா கூறியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ஆறு பேரின் உடல்களை தெற்கு காசாவிலுள்ள (Gaza) சுரங்கப்பாதை ஒன்றிலிருந்து மீட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று முன்தினம் (31) தெரிவித்திருந்தது.

பிரதமர் நெதன்யாகு

இதையடுத்து இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக, பிணைக் கைதிகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி   நாடெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதற்கிடையே பிரதமர் நெதன்யாகு கூறும்போது, “6 பிணைக்கைதிகளையும் தலையின் பின்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு ஹமாஸ் அமைப்பினர் கொன்றுள்ளனர்.

அவர்களை உயிருடன் திரும்பக் கொண்டு வராததற்காக உங்களிடம்  மன்னிப்பு கேட்கிறேன். இதற்கு ஹமாஸ் பெரும் விலை கொடுக்க நேரிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[N0WVBZM
]

NO COMMENTS

Exit mobile version