Home உலகம் இஸ்ரேல் தாக்குதலின் கொடூரம் : காசா மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி

இஸ்ரேல் தாக்குதலின் கொடூரம் : காசா மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி

0

காசாவில் (Gaza) இஸ்ரேலிய (Israel) ஏவுகணைத் தாக்குதலில் அந்நாட்டு மருத்துவரின் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மருத்துவரின் பத்துக் குழந்தைகளில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, உயிர்பிழைத்த மகன் பலத்த காயமடைந்துள்ளதுடன், அவரது மருத்துவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்

இஸ்ரேலிய தாக்குதலின் போது மருத்துவர் பணியில் இருந்த நிலையில் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

மேலும், உயிரிழந்த குழந்தைகளில் மூத்த குழந்தையின் வயது 12 மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version