Home இலங்கை அரசியல் ரணிலுடன் கைகோர்த்த மகிந்தவின் முக்கிய ஆதரவாளர்

ரணிலுடன் கைகோர்த்த மகிந்தவின் முக்கிய ஆதரவாளர்

0

Courtesy: Sivaa Mayuri

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) முக்கிய ஆதரவாளராக கொழும்பில் செயற்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மகிந்த கஹந்தகம ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார்.

அவர், இன்று (03.07.2024) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்துள்ளார். 

2022ஆம் ஆண்டு போராட்டம் 

கொழும்பில் 2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி அன்று இடம்பெற்ற வன்முறையின் போது, போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட முக்கியமானவர்களில் இவரும் ஒருவராவார். 

இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை உறுதியளித்துள்ள அவர், ஐக்கிய தேசியக்கட்சியின்  மத்திய கொழும்புத் தொகுதியின் வலய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/mahinda-kahandhagama-joined-ranil-1719992971

NO COMMENTS

Exit mobile version