பாகிஸ்தான் தூதரகத்திற்கு நபரொருவர் கேக் கொண்டு செல்லும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த காணொளி வெளியானதால், பயங்கரவாதத் தாக்குதலை பாகிஸ்தான் தூதரகம் கேக் வெட்டிக் கொண்டாடியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த வைரல் காணொளியில், கேக்கை கையில் எடுத்துச் செல்லும் நபர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தவிர்ப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
கொண்டாட்டம்
இந்த கேக் எதற்கு ? கொண்டாட்டம் எதற்கு ? நீங்கள் பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து வருகிறீர்களா ? என ஊடகவியலாளர்கள் அந்த நபரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இருப்பினும், குறித்த எவ்வித கேள்விகளுக்கும் பதில் வழங்காது அந்த நபர் அவ்விடத்திலிருந்து வெளியேற முற்படுவது காணொளியில் காணக்கூடியதாக இருந்தது.
பாகிஸ்தான் தூதரகம்
வைரலான இந்த காணொளி சமூக ஊடகங்களில் விவாதங்களைத் தூண்டியுள்ளது.
🚨 SHAMEFUL! A cake was brought to the Pakistan High Commission, Delhi.
— Celebration of Pahalgam terror attack…? pic.twitter.com/Lt1ij4lFIi
— Megh Updates 🚨™ (@MeghUpdates) April 24, 2025
பாகிஸ்தான் தூதரகம் பயங்கரவாதத் தாக்குதலைக் கொண்டாடுவதாக பலர் தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளமை பாரிய அதிர்வலையை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
