Home இலங்கை அரசியல் நல்லை ஆதீனத்திற்குச் விஜயம் செய்தார் நாமல் ராஜபக்ச

நல்லை ஆதீனத்திற்குச் விஜயம் செய்தார் நாமல் ராஜபக்ச

0
புதிய இணைப்பு 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நல்லை ஆதீனத்திற்குச் விஜயம் செய்துள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக நாமல் ராஜபக்ச, யாழ்ப்பாணத்திற்கு இன்று (12) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பிரசார நடவடிக்கை

இந்தநிலையில், நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்த நாமல் ராஜபக்ச
பொன்னாடை போர்த்து அவரை கௌரவித்துள்ளார்.

இதையடுத்து, பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்ட நிலையில் நல்லை ஆதீன குரு முதல்வரால்
நாமல் ராஜபக்சவுக்கு நினைவாக நந்திக் கொடி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு 

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவிற்கும் (Namal Rajapaksa) யாழ் (Jaffna) மறை மாவட்ட ஆயரிற்கும் இடையிலான
சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று (12) யாழ் மாவட்ட ஆயர் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் நாமல் ராஜபக்ச மற்றும் அவர் தரப்பை சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கலந்துரையாடல்

அத்தோடு, குறித்த சந்திப்பில் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் (Justin Gnanapragasam) மற்றும் நாமல்
ராஜபக்சவிற்கும் இடையில் 15 நிமிடங்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் தொடர்பான விடயங்களை நாமல் ராஜபக்ச பின்னர் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

  

அத்தோடு, நாமல் ராஜபக்சவின் தேர்தல்
பரப்புரை கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பார் தம்பித்துரை ரஜீவ் (Thambithurai Rajiv) ஏற்பாட்டில் இன்று (12) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

மேலும், இந்த கூட்டத்தில் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என
பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/meeting-between-namal-and-jaffna-district-bishop-1726128109

NO COMMENTS

Exit mobile version