Home இலங்கை அரசியல் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து நெல்லியடியில் பொதுக் கூட்டம்

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து நெல்லியடியில் பொதுக் கூட்டம்

0

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனை ஆதரவளிக்கும் பொதுக் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணம் நெல்லியடியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பொதுக் கூட்டம், நேற்றையதினம் (10.09.2024) நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில்
ஈபிஆர்எல்எவ் தேசிய அமைப்பாளர் சிவகுமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சிற்புரைகளை முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் சட்ட்தரணி வி. மணிவண்ணன்,
ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ்பிரேமசந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
விந்தன் கனகரட்ணம் மற்றும் பொருளியல் ஆய்வாளர் செல்வின் இராணியஸ், உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.

அதிகளவான மக்கள்

மேலும், இந்தப் பொதுக் கூட்டத்தில் அதிகளவான மக்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

Source: https://tamilwin.com/article/meeting-in-nelliyadi-in-support-of-tamil-candidate-1726012751

NO COMMENTS

Exit mobile version