Home இலங்கை அரசியல் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து

தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து

0

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பின்னால் திரிந்த தமிழ் அரசியல்வாதிகள் தற்போது விழிப்படைந்தது போல நடந்து கொள்வதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) கடுமையாக விமர்சித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நமது தமிழ் அரசியல்வாதிகள், ரணிலுக்கு பின்னால் அவரது காலை நக்கிபிழைக்கின்ற போது அவர்களுக்கு செம்மணி
புதைக்குழி தெரியவில்லை மற்றும் இசைப்பிரியா தெரியவில்லை.

ஆனால் அன்று முடமாகவும் குருடர்களாகவும் இருந்த நபர்கள் இன்று ஏதோ விழிப்படைந்தது போல தோரணம் காட்டி தாங்கள்தான் தமிழ் மக்களின் விமோசகர்கள் என்ற கூற்றை முன்வைக்கின்றார்கள்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழ் அரசியல் களம், வடக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் தற்போதைய நடப்பு அரசியல் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/Be3bAHfmUSM

NO COMMENTS

Exit mobile version