Home உலகம் 2030 இல் சந்திரனில் அணு உலை: வியக்க வைக்கும் நாசாவின் திட்டம்

2030 இல் சந்திரனில் அணு உலை: வியக்க வைக்கும் நாசாவின் திட்டம்

0

அமெரிக்க (America) விண்வெளி நிறுவனமான நாசா, 2030 ஆம் ஆண்டுக்குள் சந்திரனில் அணு உலை அமைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனிதர்கள் சந்திர மேற்பரப்பில் நிரந்தர தளம் அமைப்பதற்கு இந்த அணு உலை, அமெரிக்காவின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும்.

நாசாவின் இடைக்கால தலைவரான போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி, சீனாவும் மற்றும் ரஷ்யாவும் 2035 ஆம் ஆண்டுக்குள் சந்திரனில் அணு மின் நிலையம் அமைக்கத் திட்டமிடுவதாக குறிப்பிட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்தை அறிவிக்கலாம் என எச்சரித்திருந்தார்.

பாதுகாப்பு கவலைகள் 

இந்தநிலையில், இது அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தை பாதிக்கலாம் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நாசாவின் 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 24 வீத வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த இலக்கு மற்றும் காலக்கெடு யதார்த்தமானதா என கேள்விகள் எழுந்துள்ளன.

சில விஞ்ஞானிகள் இத்திட்டம் அறிவியல் முன்னேற்றத்தை விட புவிசார் அரசியல் நோக்கங்களால் உந்தப்படுவதாக உள்ளதாக கருதுத்து வெளியிட்டுள்ளனர்.

சந்திர உலையை அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் என்றாலும், பாதுகாப்பு கவலைகள் மற்றும் ஆர்ட்டெமிஸ் மூன்று திட்டத்தின் தாமதங்கள் போன்ற சவால்கள் உள்ளன.

இந்த திட்டம் வெற்றியடைந்தால், சந்திரனில் நிரந்தர மனித வாழிடங்களை உருவாக்குவதற்கு முக்கியமான முன்னேற்றமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.    

NO COMMENTS

Exit mobile version