Home உலகம் ரஷ்யாவுக்குள் ஊடுருவியுள்ள உக்ரைன்: அமெரிக்காவை குற்றஞ்சாட்டும் வடகொரியா

ரஷ்யாவுக்குள் ஊடுருவியுள்ள உக்ரைன்: அமெரிக்காவை குற்றஞ்சாட்டும் வடகொரியா

0

ரஷ்யாவுக்குள்(Russia) உக்ரைனின்(Ukraine) இந்த அடாவடித்தனம் என்பது அமெரிக்காவின்(US) ரஷ்யாவிற்கு எதிரான மோதல் கொள்கையின் விளைவு என்று வடகொரியா விமர்சித்துள்ளது.

ரஷ்யாவிற்குள் உக்ரைன் ஊடுருவியதற்கு வடகொரியா(North Korea) தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் முன்னெடுக்கும் பயங்கரவாத செயல் தான்இது என குறிப்பிட்டுள்ளது.

மூன்றாம் உலகப் போர்

ரஷ்யாவுக்குள் ஊடுருவிய உக்ரைனின் நடவடிக்கையால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதியிடம் கணக்கில்லாத ஆபத்தான ஆயுதங்களை அமெரிக்கா அள்ளிக்கொடுத்துள்ளது.

ரஷ்ய மண்ணில் நுழைந்து தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் கைப்பாவை நாடான உக்ரைனை வன்மையாக கண்டிருக்கின்றோம்.

பயங்கரவாத நடவடிக்கை

இது மன்னிப்பே இல்லாத பயங்கரவாத நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ரஷ்யா உடனான நெருக்கமான உறவை பாதுகாத்துவரும் வடகொரியா, உக்ரைனுக்கு எதிராக ஆயுதம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

தென் கொரியா, உக்ரைன் மற்றும் அமெரிக்காவும் வடகொரியாவின் செயலை கடுமையாக கண்டித்துள்ள நிலையில், வடகொரியாவும் ரஷ்யாவும் இதனை மறுத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version