Home உலகம் பாரிஸ் நதியில் மிதந்த திகில் உடலங்கள்! கொலைச் சந்தேக நபர் கைது

பாரிஸ் நதியில் மிதந்த திகில் உடலங்கள்! கொலைச் சந்தேக நபர் கைது

0

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர சொய்லி லெ றுவா பகுதியால் ஓடும் செய்ன் நதியில் கடந்த 13 ஆம் திகதி நான்கு ஆண்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனித்தனி கொலைகள்

அல்ஜீரிய பூர்வீகத்தை கொண்ட இந்த 25 வயது நபர், தற்போது பாரிஸின் குற்றப் புலனாய்வுத் துறையில் வைத்து கொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். 

இந்த நிலையில், சந்தேகநபர் தனித்தனியாக கொலைகளை செய்து உடலங்களை ஆற்றில் வீசியதாக சந்தேகிக்கப்படும் நிலையில் குறைந்தது இவர் மீது 96 மணி நேரம் விசாணை நடைபெறலாம் என தெரியவருகிறது.

உடற்கூற்றாய்வு

மோசமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு உடலங்களில் ஒருவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டமைக்கான அறிகுறியும் இன்னொன்று கடும் தாக்குதல்களால் ஏற்பட்ட காயங்களால் கொல்லப்பட்டமைக்காக ஆதாரங்களும் உடற்கூற்றாய்வில் வெளிப்பட்டிருந்தன. 

கொல்லப்படடவர்களில் ஒருவர் வல்-து-மார்ன் பிராந்தியத்தில் வசிக்கும் நாற்பது வயதான ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

கடந்த 13 திகதியன்று சொய்சி பாலத்துக்கு அருகில் சென்ற வழிப்போக்கர் ஒருவரும் ஆற்றுக்கு அருகால் சென்ற தொடருந்தில் சென்ற பயணி ஒருவரும் ஆற்றில் மிதக்கும் ஒரு உடலைக் கண்ட பின்னர் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது நீரில் மூழ்கிய நிலையில் மற்ற மூன்று உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version