Home உலகம் சுற்றுலா பயணிகளுக்காக வினோத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு

சுற்றுலா பயணிகளுக்காக வினோத திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு

0

சுற்றுலாப் பயணிகளுக்காக ஜப்பான்(Japan) ஒரு வினோதமான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஒரே நாளில் பாடசாலை படிப்பை முடித்து சான்றிதழ் தரும் திட்டம் ஒன்றை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக “ஒரு நாள் மாணவர்” என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய திட்டம்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளூர் பாடசாலையில் மாணவராக ஒரு நாளைக் கழிக்க முடியும் என தெரிவிக்கபடுகிறது.

சிபா ப்ரிபெக்சரில் உள்ள பழைய பாடசாலையில் இந்த திட்டம் நடைபெறுகின்றதுடன் 30,000 யென் மூலம் இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரே நாளில் சான்றிதழை பெறலாம் என கூறப்படுகின்றது.

இந்த பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கையெழுத்து, கட்டானா சண்டை, உடற்கல்வி மற்றும் பல கற்றல் நடவடிக்கைகள் அனுபவிக்க முடியும் என தெரிக்கப்படுகின்றது.

அத்துடன், முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி திட்டத்தை உண்டோகயா என்ற நிறுவனம் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

[CATOP14

NO COMMENTS

Exit mobile version