Home உலகம் நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த புடின்

நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த புடின்

0

உக்ரைனுக்கு (Ukraine) ஆயுத உதவி செய்வதில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லையை மீறி விட வேண்டாம் எனவும் ரஷ்யாவுடன் (Russia) மோதல் ஏற்பட்டால் இந்த போர் விரைவில் அணு ஆயுத போராக மாறிவிடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin
) எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, இதன் காரணமாக இந்த போரில் தங்கள் இலக்கை எட்டுவதற்கு அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கான தேவை இருக்காது எனவும் அதே சமயம் ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்தாது என மேற்கத்திய நாடுகள் எண்ணுவது தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த 2022  இல் அந்த நாடு மீது போர் தொடுத்தது.

போரின் போக்கு 

உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என நினைத்து போரை தொடங்கிய ரஷ்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது அத்தோடு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகள் அளிப்பதால் ரஷ்யாவுக்கு கடும் சவாலை உக்ரைன் அளித்து வருகிறது.

இதனால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போர் நீடித்து வருகிறது இதனிடையே இந்த போரின் போக்கு தற்போது ரஷ்யாவுக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version