Home உலகம் வெளிநாடொன்றின் 21 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: அச்சத்தில் மக்கள்

வெளிநாடொன்றின் 21 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: அச்சத்தில் மக்கள்

0

இத்தாலி (Italy) நாட்டிலுள்ள 21 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கய் செயதழ வெளியிட்டுள்ளன.

கடும் வெப்பநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைநகர் ரோம், பொருளாதார சக்தி வாய்ந்த மிலன் மற்றும் வெனிஸ் உள்ளிட்ட நகரங்களுக்கும் சுகாதார அமைச்சகம் உச்சபட்ச சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தெளிவான அறிகுறி 

அத்தோடு, சில இடங்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (99 டிகிரி பாரன்ஹீட்) வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

வெப்ப அலை இருந்தபோதிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பிரபலமான இடமான கொலோசியம் போன்ற பரபரப்பான இடங்களில் நோயாளர்காவு வண்டிகள் மற்றும் மருத்துவர்களை நகர நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ளது.

தீவிர வெப்ப அலைகள் புவி வெப்பமடைதலின் தெளிவான அறிகுறி என்றும், அவை அடிக்கடி நீண்ட மற்றும் தீவிரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version