Home உலகம் ரஷ்யாவில் நிலநடுக்கத்திற்கு பிறகு வெடித்து சிதறிய எரிமலை

ரஷ்யாவில் நிலநடுக்கத்திற்கு பிறகு வெடித்து சிதறிய எரிமலை

0

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து ரஷ்யாவில் உள்ள கிளைச்செவ்ஸ்கோய் எரிமலை வெடித்தது

இன்று புதன்கிழமை பசிபிக் பெருங்கடலைத் தாக்கிய 8.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்திற்குப் பிறகு ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள கிளைச்செவ்ஸ்கோய் எரிமலை வெடிக்கத் தொடங்கியது. கடைசியாக ஏப்ரல் 2025 இல் இந்த எரிமலை வெடித்தது.

 50 க்கும் மேற்பட்ட முறை வெடித்துள்ளது

4,750 மீட்டர் (15,584 அடி) உயரம் கொண்ட கிளைச்செவ்ஸ்காய் உலகின் மிக உயரமான  எரிமலைகளில் ஒன்றாகும்.இது பிராந்தியத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கிக்கு வடக்கே 450 கிமீ (280 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

 1700 ஆம் ஆண்டு முதல் இந்த எரிமலை 50 க்கும் மேற்பட்ட முறை வெடித்துள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version