Home உலகம் விசா இல்லாமல் பணி! லண்டனில் தேடுதல் வேட்டை – மாதம் 6,000 பவுண்ஸ் சம்பாதித்தவர் அகப்பட்டார்

விசா இல்லாமல் பணி! லண்டனில் தேடுதல் வேட்டை – மாதம் 6,000 பவுண்ஸ் சம்பாதித்தவர் அகப்பட்டார்

0

பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற முக்கிய ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படி பணிபுரிவதற்கான நுழைவிசைவு (விசா) இல்லாமல் சட்டவிரோதமாக வேலை செய்பவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தவாரம் உந்துருளிகளில் உணவு விநியோகத்தில் ஈடுபடும் ஒட்டுநர்கள் அதிரடி சோதனைகளுக்கு உள்ளாக்கபட்ட நிலையில் அவர்களில் பலர் விசா இல்லாமல் பணிபுரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஒருவராக இந்த அகதி தஞ்சம் கோரி விண்ணப்பித்த பிரேசிலியர் ஒருவர் சட்டவிரோதமாக உணவு விநியோக தொழில் ஈடுபட்டு ஒன்றுக்கு 6,000 பவுண்டுக்கு மேல் சம்பாதித்த விடயம் குடியேற்றத்துறை அதிகாரிகளால் (ஹோம் ஒபிஸ்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வேலை

தெற்கு லண்டன் சட்டனில் பகுதியில் இயங்கிய உணவு தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மீது நடத்தபட்ட சோதனையில் இந்த விடயம் பிடிபட்டது.

குறித்த நபர் தனது மனைவியுடன் அகதி தஞ்சம் கோரி விண்ணப்பித்த நிலையில் அவர் பணிபுரிய அனுமதி இல்லாத நிலையில் அவர் டெலிவறூ, ஜஸ்ட் ஈற் மற்றும் ஊபர் ஈட்ஸ் ஆகிய நிறுவனங்களில் உள்ள கணக்குகளை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் சட்டவிரோதமாக வேலை செய்து மாதம் 6 ஆயிரம் பவுண்சுக்குமேல் ஈட்டிய அதேவேளை புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி சலுகைளையும் பெற்றுள்ளார்.

நுழைவிசைவு சோதனை 

இந்த சம்பவத்தை அடுத்த சட்டவிரோத வேலைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தற்போது உந்துருளிகள் மூலம் உணவு விநியோகம் செய்யும் ஓட்டுநர்களிடம் பணிபுரிவதற்கான நுழைவிசைவுகள் உள்ளனவா என்பதை அறியும் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் ஜஸ்ட் ஈட், டெலிவறூ மற்றும் ஊபர் ஈட்ஸ் ஆகிய நிறுவனங்களும் விசா இல்லாமல் சட்டவிரோதமாக பணிபுரிபவர்களின் அடையாளம் காணும் நடவடிக்கைக்கு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க உடன்பட்டுள்ளன.  

NO COMMENTS

Exit mobile version