Home உலகம் 2024 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடு

2024 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடு

0

2024 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகளின் படியலில் கனடா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்காவின் பயணக் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பான நாடுகளின் தரவரிசை 

அதன்படி, கனடா முதலாம் இடத்தையும் சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தையும் நோர்வே மூன்றாம் இடத்தையும் அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து நான்காம் மற்றும் இடங்களைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கனடா பாதுகாப்பான நாடாக இருந்தாலும், கனடாவில் உள்ள சில வனப்பகுதிகளில் இந்த நாட்களில் ஏற்பட்ட காட்டுத் தீ சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு பொருத்தமற்றது என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தரவரிசை வன்முறைச் செயல்கள், குற்றச் சம்பவங்கள் மற்றும் மக்கள் தொகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், முதல் 15 இடங்களில் அவுஸ்திரேலியா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகியவையும் உள்ளடக்கப்படுகின்றன.

NO COMMENTS

Exit mobile version