Home இலங்கை அரசியல் அநுர அரசாங்கத்திற்கு எதிராக உச்சக்கட்ட நகர்வில் மொட்டுக் கட்சி

அநுர அரசாங்கத்திற்கு எதிராக உச்சக்கட்ட நகர்வில் மொட்டுக் கட்சி

0

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி தினசரி ஊடக சந்திப்புகளை நடத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வாரம் முதல் குறித்த ஊடக சந்திப்புகளை டத்தவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த ஊடக மாநாடுகளில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

நாமலின் அறிவுறுத்தல்கள்

அதனை தொடர்ந்து, அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை ஊடக சந்திப்புகளில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புதன்கிழமைகளில் உள்ளூராட்சி பிரதிநிதிகள் சங்க உறுப்பினர்களாலும், மற்ற நாட்களில் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அமைப்புகளாலும் ஊடக சந்திப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பலவீனங்களைக் கண்டறிந்து, அவை குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

NO COMMENTS

Exit mobile version