Home இலங்கை அரசியல் விடுதலைப் புலிகள் தொடர்பில் பிள்ளையானின் சர்ச்சைக்குரிய கருத்து! விசாரணை கோரும் மகிந்த தரப்பு

விடுதலைப் புலிகள் தொடர்பில் பிள்ளையானின் சர்ச்சைக்குரிய கருத்து! விசாரணை கோரும் மகிந்த தரப்பு

0

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதம் வழங்கப்பட்டமை குறித்து இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

விசாரணை வேண்டும்..

கிரிபத்கொடவில், இடம்பெற்ற கட்சி மாநாட்டின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்(Sivanesathurai Santhirakanthan) எனப்படும் பிள்ளையான் கூறியது போன்று எந்தவொரு அரசியல் கட்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியிருந்தால் அது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்  என தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த நிகழ்வில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/sri-lanka-civil-war-1719736702

NO COMMENTS

Exit mobile version