Home உலகம் கனேடிய அரசினால் கௌரவிக்கப்பட்டுள்ள இரு புலம்பெயர் தமிழர்கள்!

கனேடிய அரசினால் கௌரவிக்கப்பட்டுள்ள இரு புலம்பெயர் தமிழர்கள்!

0

கனேடிய (Canada) அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் (Charles iii) முடிசூட்டு பதக்கத்தை இம்முறை  இரு புலம்பெயர் தமிழர்கள் வென்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, கணேசன் சுகுமார் (Ganeshan Sugumar) மற்றும் குலா செல்லத்துரை (Gula Selladhurai) ஆகிய இரு புலம்பெயர் தமிழர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முடிசூட்டு பதக்கமானது மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் விதமாக கனேடிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட உயர் பெருமைக்குரிய பதக்கமாகும்.

கனடாவின் வளர்ச்சி

கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி சிமொனினால் (Mary Simon) வழங்கப்படும்  இந்த அங்கீகாரம், அந்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படுகின்றது.  

மேலும், கனேடிய அரசினால் மொத்தமாக 18 கனேடியர்களுக்கு இந்த உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு புலம்பெயர் தமிழர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version