Home உலகம் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு மற்றுமொரு பாரிய இழப்பு : மூத்த தலைவர் சுட்டுக்கொலை

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு மற்றுமொரு பாரிய இழப்பு : மூத்த தலைவர் சுட்டுக்கொலை

0

கிழக்கு லெபனானின்(lebanon) பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவரும் உள்ளூர் தளபதியுமான ஷேக் முகமது அலி ஹமாடி நேற்று முன்தினம் (21), இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

“மேற்கு பெக்கா மாவட்டத்தின் மச்காரா பகுதியில் ஹமாடி தனது வீட்டுக்கு அருகில் துப்பாக்கியால் 6 முறை சுடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த ஹமாடி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

பல வருட குடும்ப சண்டை 

“ஹமாடியின் கொலைக்கு பல வருட குடும்ப சண்டை காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து லெபனான் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியல்

“ஏதென்ஸ் நகரில் இருந்து ரோம் நோக்கி 153 பேருடன் சென்ற ஒரு விமானத்தை கடத்தியதற்காக அமெரிக்க விசாரணை அமைப்பின் (எப்.பி.ஐ) தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் ஹமாடியும் இருந்தார்.

“இஸ்ரேஸ் – ஹிஸ்புல்லா இடையே ஆரம்பகட்ட 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அது முடிவடைவதற்கு சில நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version