Home உலகம் ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த விமானம் – இருவர் பலி

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த விமானம் – இருவர் பலி

0

சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி சென்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விபத்து உள்ளூர் நேரப்படி இன்று (20.10.2025) அதிகாலை 3.50 மணிக்கு ஹாங்காங் (Hong Kong) சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

துபாயிலிருந்து (Dubai) ஹாங்காங் சென்ற எமிரேட்ஸ் விமானம் EK9788, ஓடுபாதையில் ஒரு வாகனம் மீது மோதி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் வீழ்ந்து விபத்து

விபத்தின் காரணமான இருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் இருவரும் தரையில் விமான நிலைய வாகனத்தில் இருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு விமான நிலையத்தின் வடக்கு ஓடுபாதை மூடப்பட்டுள்ளதுடன் தெற்கு மற்றும் மத்திய ஓடுபாதைகள் தொடர்ந்து இயங்கும் என்று ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்கள் மீட்கப்பட்டதாக சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version