‘தான் இல்லையென்றால், அமெரிக்க சந்தை இப்போது சாதனை உச்சத்தில் இருந்திருக்காது, செயல் இழந்திருக்கும்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) தனக்கு தானே புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெசென்ட், பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலை நீக்குவதற்கு, எனக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதாக, ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை ஒரு வழக்கமான பொய்யான கதையை வெளியிட்டது.
யாரும் எனக்கு விளக்க வேண்டியதில்லை
அதை யாரும் எனக்கு விளக்க வேண்டியதில்லை. சந்தைக்கு எது நல்லது, அமெரிக்காவிற்கு எது நல்லது என்பது வேறு யாரையும் விட எனக்கு நன்றாகத் தெரியும். நான் இல்லையென்றால், சந்தை இப்போது சாதனை உச்சத்தில் இருந்திருக்காது.
அது செயலிழந்திருக்கும். எனவே, உங்கள் தகவலை சரியாக வெளியிடுங்கள். மக்கள் எனக்கு விளக்கவில்லை, நான் அவர்களுக்கு விளக்குகிறேன். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.வழக்கமாக கடந்த சில தினங்களாக தன்னை பெருமையாக ட்ரம்ப் பேசி வருகிறார்.
நோபல் பரிசிற்கு ஆசைப்படும் ட்ரம்ப்
அதற்கு ஒரு உதாரணம், நான் தான் பல்வேறு நாடுகளில் நிகழும் போர் மற்றும் சண்டைக்கு முடிவுரை எழுதி வருகிறேன். எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என ட்ரம்ப் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
