முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்,(donald trump) பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் கவுண்டியில் நடந்த பேரணியில் பேசியபோது, அவரது பாதுகாவலர்களின் அலட்சியத்தால் சுடப்பட்டதாக ட்ரம்ப் ஆதரவாளரான கிரெக் என்ற நபர் தான் பார்த்ததை பிபிசிக்கு விளக்கினார்.
டிரம்ப் பேரணியில் உரையாற்றும் போது, ஒரு பங்கேற்பாளர் ட்ரம்பின் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களிடம், துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கி சுடும் வீரர் சுமார் 400 அடி தூரத்தில் உள்ள உயரமான கட்டிடத்தின் மீது ஏறுவதைக் கண்டதாகக் கூறினார், ஆனால் அவர்கள் அதைப் புறக்கணித்ததாகக் கூறினார்.
அதிர்ச்சியடைந்த கிரெக்
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கிரெக் என்ற ட்ரம்ப் ஆதரவாளர், தான் பார்த்ததை பிபிசி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
துப்பாக்கிச் சூடு சத்தம்
மேலும் இது குறித்து பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவித்தார்.
‘கூரையில் யாரோ ஏறுவதைக் கண்டேன். அதை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினேன். ஆனால் அவர்கள் என்னை புறக்கணித்தனர். உடனே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது”என கிரெக் கூறினார்.
இதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அமெரிக்காவில் உள்ள ஆயுதமேந்திய தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவரா அல்லது வெளிநாட்டுக் கூலிப்படையைச் சேர்ந்தவரா என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
https://www.youtube.com/embed/4ES7A83f4Oc