Home உலகம் 20 வீரர்களுடன் வெடித்து சிதறிய வெளிநாட்டு இராணுவ விமானம்!

20 வீரர்களுடன் வெடித்து சிதறிய வெளிநாட்டு இராணுவ விமானம்!

0

துருக்கிய சி-130 ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து நடந்தபோது விமானத்தில் பணியாளர்கள் உட்பட 20 ராணுவ வீரர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜர்பைஜானில் இருந்து துருக்கிக்குத் திரும்பும் போது விமானம் விபத்துக்குள்ளானதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

விபத்துக்கான காரணம்

இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  

NO COMMENTS

Exit mobile version