Home உலகம் துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிர்வில் சிக்கிய முக்கிய நகரம்

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிர்வில் சிக்கிய முக்கிய நகரம்

0

துருக்கியில் (Türkiye) சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கமானது இன்று (23) துருக்கியின் பொருளாதார முக்கிய நகரமான இஸ்தான்புல்லுக்கு அருகிலுள்ள மர்மாரா கடலில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

உயிர் சேதம்

இந்த நிலநடுக்கத்தினால், இஸ்தான்புலில் நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இதனால் உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

எனினும், இந்த நிலநடுக்கத்தினால் அந்த நகரத்தில் தொடர்ந்து அதிர்வலைகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை, நிலநடுக்கம் அபாயமிகுந்த நாடாக கருதப்படும் துருக்கியில் கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version