Home உலகம் மீண்டும் ரஷ்யாவிற்கு பேரிடி : ஏவுகணை தளத்தை தாக்கி அழித்தது உக்ரைன்

மீண்டும் ரஷ்யாவிற்கு பேரிடி : ஏவுகணை தளத்தை தாக்கி அழித்தது உக்ரைன்

0

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் ஒப்லாஸ்டில் அமைந்துள்ள கிளிண்ட்ஸி நகருக்கு அருகில் உள்ள ஒரு ரஷ்ய ஏவுகணைப் பிரிவு மீது இன்று(05)உக்ரைனிய பாதுகாப்புப் படைகள் துல்லியமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை உக்ரைனின் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உக்ரைன் தலைநகர் மீது தாக்குதல் நடத்த திட்டம்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யாவின் 26வது ஏவுகணைப் படைப் பிரிவு, தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து உக்ரைனியப் படைப் பிரிவுகளின் செயல்பாட்டு உளவு மற்றும் ஒருங்கிணைப்பு காரணமாக, தாக்குதல் தடுக்கப்பட்டது.

தாக்குதலின் விளைவாக, ஒரு ரஷ்ய இஸ்கந்தர் ஏவுகணை வெடித்ததாகவும், மேலும் இரண்டு கடுமையாக சேதமடைந்ததாகவும் ஆரம்ப அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ரஷ்ய இழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களிடையே எந்த உயிரிழப்பும் இல்லை என உக்ரைன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.

அண்மையில் ரஷ்யாவின் ஐந்து விமானப்படை தளங்கள்மீது தாக்குதல் நடத்தி 41 விமானங்களை அழித்த நிலையில் மீண்டும் மற்றுமொரு வெற்றிகர தாக்குதலை உக்ரைன் படைகள் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version