Home உலகம் அமெரிக்க வரி தாக்கம்: சிக்கலில் இலங்கை பொருளாதாரம்

அமெரிக்க வரி தாக்கம்: சிக்கலில் இலங்கை பொருளாதாரம்

0

இலங்கை (Sri Lanka) பொருட்கள் மீது அமெரிக்கா (United States) அண்மையில் விதித்த 20 வீதம் வரி காரணமாக ஏற்படும்
விளைவுகளைப் பற்றிய முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று (06) இலங்கை ஏற்றுமதி
அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில், வரி உயர்வின் நேரடி தாக்கம், இலங்கையின் முக்கியமான
ஏற்றுமதி பொருட்கள் மீது ஏற்படும் நட்டம் மற்றும் உயரும் உற்பத்தி செலவுகள்
குறித்து விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய ஏற்றுமதி

குறிப்பாக, ஆடைத் துறை, தேயிலை, ஏனைய விவசாய மற்றும் கடலுணவு பொருட்கள்
உள்ளிட்ட அமெரிக்காவுக்கான முக்கிய ஏற்றுமதி பிரிவுகள் இந்த வரியால் மோசமான
பாதிப்பை எதிர்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க சந்தையில் போட்டியிடும் இலங்கை நிறுவனங்களுக்கு கிடைக்கும் வர்த்தக
நன்மைகள் குறையக்கூடும் என்பதால், நிலைமையை சமாளிக்க புதிய சந்தைகள் தேடல்,
வர்த்தக உடன்பாடுகள் மீளாய்வு மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தல் போன்ற
தீர்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, இந்த வரிச்
சவாலை எதிர்கொள்ள ஏற்றுமதித் துறையின் ஒருமித்த அணுகுமுறையும், அரச மற்றும்
தனியார் துறைகளின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் அவசியம் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version