வடகொரியாவிற்கு (North Korea) ரஷ்யா (Russia) ஆயுதங்களை வழங்கலாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) வெளியிட்ட கருத்து தொடர்பில் அமெரிக்கா (US) கவலை வெளியிட்டுள்ளது.
வடகொரிய விஜயத்தின் போது விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள இந்த கருத்து “நம்பமுடியாத அளவிற்கு கவலை அளிக்கிறது” என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் (Matthew Miller) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “ரஷ்யாவும் வடகொரியாவும் கைச்சாத்திட்ட பாதுகாப்பு உடன்படிக்கை கொரிய தீபகற்பத்தின் (Korean peninsula) பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு மிகவும் அச்சுறுத்தலானது.
மேற்குலக நாடுகள்
அத்துடன், ரஷ்யா வடகொரியாவிற்கு மேற்கொள்ளும் ஆயுத விநியோகமானது ஐ.நா (United Nations) பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறுகின்ற செயல்” என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், 24 வருடங்களுக்கு பிறகு ரஷ்ய அதிபர் வடகொரியாவிற்கு மேற்கொண்ட விஜயமானது மேற்குலக நாடுகளிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.