Home உலகம் கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கனடாவிலுள்ள (Canada)  மாகாணமொன்றில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பயங்கர நோய் தொற்று பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, கனடா- மானிடோபா பகுதியில்  ஆபத்தான பாக்டீரியா நோய் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பாக்டீரியா தாக்கத்துக்கு உள்ளாகும் மக்கள் கடுமையாக நோய்வாய்ப்படுவதாகவும் உயிராபத்து ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாக்டீரியா தொற்று பரவுகை

ஆபத்தான மூளையுறை அழற்சி நோய் ஏற்படுவதாகவும் இது மூளை மற்றும் முள்ளந்தண்டு பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் ஒன்றாரியோ மற்றும் மானிடோபா பகுதிகளில் இந்த ஆண்டில் குறித்த பாக்டீரியா தொற்று பரவுகை குறித்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

மானிடோபாவில் ஆண்டொன்றுக்கு ஆறு நோயாளிகள் பதிவாகின்ற போதிலும் இந்த ஆண்டில் சுமார் 19 பேர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version