Home உலகம் பிரான்ஸ் அதிபரை கோபத்துடன் பார்க்கும் இத்தாலி பிரதமர்: வைரலாகும் காணொளி

பிரான்ஸ் அதிபரை கோபத்துடன் பார்க்கும் இத்தாலி பிரதமர்: வைரலாகும் காணொளி

0

பிரான்ஸ் (France) நாட்டின் அதிபரை இத்தாலி (Italy) பிரதமர் ஜியார்ஜியா மெலோனி (Georgia Meloni) கோபமாக பார்க்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இத்தாலியில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டுக்காக பிரான்ஸ் அதிபர்  இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron)  இத்தாலி சென்றிருந்தார்.

இந்தநிலையில், அவரை இத்தாலி பிரதமர் முறைத்துப்பார்ப்பதைக் காட்டும் காணொளி வைரலாக பரவியுள்ளது.

கருத்து வேறுபாடு

G7 உச்சி மாநாட்டின் போது, கருக்கலைப்பு என்ற தலைப்பிலான விடயத்தில் இமானுவல் மேக்ரானுக்கும், ஜியார்ஜியா மெலோனிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், G7 உச்சி மாநாட்டின் அறிக்கையில், கருக்கலைப்பு என்னும் வார்த்தையை பயன்படுத்தலாமா வேண்டாமா என்னும் விடயம் குறித்தே விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு முன் ஜப்பானில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டின் அறிக்கையில், கருக்கலைப்பு என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட்ட நிலையில், இம்முறை அந்த அறிக்கையில் கருக்கலைப்பு என்னும் வார்த்தைக்கு பதிலாக தகாதமுறை மற்றும் இனப்பெருக்க நலன் மற்றும் உரிமைகள் என்னும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version