Home உலகம் உலகில் மழையே பெய்யாத கிராமம் எங்குள்ளது தெரியுமா!

உலகில் மழையே பெய்யாத கிராமம் எங்குள்ளது தெரியுமா!

0

மழை, வெயில் இரண்டுமே இயற்கை அள்ளித்தந்த கொடைகள், எனவே இவை இரண்டுமே மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றது.

மழை பெய்யாவிட்டாலும் பிரச்சினை தான் வெயில் இல்லாவிட்டாலும் பிரச்சினை தான்.  இவை இரண்டுமே வாழ்வில் இன்றியமையாதவையாகும்.

இந்த வகையில், உலகில் மழையே பெய்யாத இடம் எங்கு உள்ளது என பார்க்கலாம்.

மழையே பெய்யாத  கிராமம்

யேமன் (Yemen) நாட்டின் தலைநகர் சனாவில் தான் அல்-ஹுதீப் என்ற கிராமம் தான் உலகில் மழையே பெய்யாத கிராமமாக உள்ளது.

இந்தக் கிராமம் தரை மட்டத்திலிருந்து சுமார் 3200 மீற்றர் உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் உள்ளது.

இங்கு மழையே பெய்யாததால், மிகவும் வறட்சி நிறைந்த கிராமமாக உள்ளது.

இந்த கிராமத்தில், மழை பெய்யாததால், வானிலை மிகவும் வறண்டு காணப்படுதோடு இரவில், கிராமத்தில் உறைபனி குளிரும் இறங்குகிறது. மீண்டும் காலை சூரியன் உதிக்கும்போது வானிலை வெப்பமடைகிறது.

காரணம்

யேமனின் இந்தப் பகுதியில் நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாதது மற்றும் மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளதால் தான் இங்கு மழை பெய்வதில்லை எனக் கூறப்படுகின்றது.

அல் ஹுதைப் கிராமத்தின் இடம் சமவெளியில் இருந்து சுமார் 3200 மீற்றர் உயரத்தில் உள்ளதால் சாதாரண மழை மேகங்கள் சமவெளியில் இருந்து 2000 மீற்றருக்குள் குவியும்.

எனவே அல்-ஹுதைபின் மீது மேகங்கள் குவிவதில்லை. இதனால் மழை பெய்ய வாய்ப்பில்லை என கூறப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version