Home உலகம் சுனாமி தாக்கத்திற்கு மத்தியில் ஜப்பான், ரஸ்யாவில் கரையொதுங்கும் திமிங்கிலங்கள்

சுனாமி தாக்கத்திற்கு மத்தியில் ஜப்பான், ரஸ்யாவில் கரையொதுங்கும் திமிங்கிலங்கள்

0

ரஷ்யாவின் (Russia) கம்சட்கா தீபகற்பத்தில் பதிவான நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யா மற்றும் ஜப்பானில் (Japan) ஏராளமான திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அமெரிக்கா, ஜப்பான், சிலி மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ரஷ்யாவின் கம்சட்காவில் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கிய வைரலான காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

எச்சரிக்கை அறிகுறி

ரஷ்யாவின் கம்சட்காவில் கரை ஒதுங்கிய பெலுகா திமிங்கலங்களின் குழு, நிலநடுக்கத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமிக்கு ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்று பலர் நம்புகின்றனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில், ஒரு குட்டி உட்பட ஐந்து பெலுகா திமிங்கிலங்கள் கம்சட்காவில் கரையில் சிக்கித் தவிப்பதைக் காட்டுகிறது.

திமிங்கலங்கள் ஆழமற்ற நீரில் இறங்கியதாகவும், அலை குறைந்து வருவதால் நீந்தத் தவறியதாகவும் கூறப்படுகிறது, இதன் விளைவாக அவை கடற்கரைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

கடற்றொழிலாளர்கள் குழு திமிங்கிலங்களை கடல் நீரில் ஈரப்பதமாக வைத்திருப்பதையும், அதிக அலை திரும்பும்போது கடலுக்குத் திரும்பி நீந்த உதவுவதையும் காணலாம்.

ஜப்பானில் கரையொதுங்கிய திமிங்கிலங்கள்

இதேவேளை ரஷ்யாவில் பதிவான நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில், ஜப்பானின் சிபாவின் டாடேயாமா நகரில் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின.

திமிங்கலங்களின் காணொளி ஒன்று படம்பிடிக்கப்பட்டு ஜப்பானில் நேரடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

ஜப்பானின் பசுபிக் கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகு, ஜப்பானின் வடகிழக்கில் உள்ள கடற்கரை நகரமான ஹொக்கைடோவில் உள்ளூர் நேரப்படி சுமார் 10:40 மணிக்கு முதல் சுனாமி அலைகள் வரத் தொடங்கின என்று ஜப்பானின் பொது ஒளிபரப்பாளரான NHK தெரிவித்துள்ளது.

கடற்கரைக்கு அருகில் நீர் மட்டங்கள் மற்றும் நீரோட்டங்களில் ஏற்படும் விரைவான மற்றும் வியத்தகு மாற்றங்கள் காரணமாக சுனாமியின் போது திமிங்கிலங்கள் கரைக்கு வரலாம்.

கடலில் ஆழமாக இருந்தாலும், திமிங்கிலங்கள் பொதுவாக சுனாமி அலைகளால் பாதிக்கப்படுவதில்லை, இந்த அலைகள் கரையை நெருங்கும் போது, தண்ணீர் ஆரம்பத்தில் வலுவாக பின்வாங்குகிறது, இது கடற்கரைக்கு அருகில் திமிங்கிலங்களை தற்காலிகமாக கரைக்கு இழுக்கும் என  தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version