Home உலகம் ட்ரம்புக்கு புறக்கணிக்கப்பட்ட நோபல் பரிசு: கொந்தளித்த வெள்ளை மாளிகை

ட்ரம்புக்கு புறக்கணிக்கப்பட்ட நோபல் பரிசு: கொந்தளித்த வெள்ளை மாளிகை

0

அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு (Donald Trump) நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிரப்பு வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகளவில் நடைபெற்றுவந்த இந்தியா (India) மற்றும் பாகிஸ்தான் (Pakistan) இடையேயான போர் உள்பட எட்டிற்கும் மேற்பட்ட போர்களைத் தடுத்து நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

இந்தநிலையில், அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என தொடர் கருத்துக்கள் வெளியாகி வந்தது.

நோபல் பரிசு

இவ்வாறான பின்னணியில் தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு, நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.

குறித்த அறிவிப்பை நோபல் பரிசு தெரிவுக் குழு வெளியிட்டுள்ளது.

வெள்ளை மாளிகை 

இதனை, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் (Steven Cheung) கடுமையாக எதிர்த்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தயோகப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல போர்களை முடிவுக்கு கொண்டுவருவார்.

முக்கியத்துவம்

அமைதி ஒப்பந்தங்களை மேற்கொள்வார் மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவார்.

அவர் மனிதாபிமானமிக்கவர், அவரின் முழு சக்தியால் மலைகளைக்கூட நகர்த்தும் வல்லமை மிக்கவர், அவரைப் போல யாரும் இருக்க மாட்டார்கள்.

நோபல் குழுவினர் அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர்” என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version