Home உலகம் உலகில் பழமையான ஈஸ்டர் முட்டை : எத்தனை வருடங்கள் தெரியுமா !

உலகில் பழமையான ஈஸ்டர் முட்டை : எத்தனை வருடங்கள் தெரியுமா !

0

500 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் பழமையான ஈஸ்டர் முட்டையொன்று உக்ரைனில் கண்டெடுக்கப்பட்டது.

உக்ரைனின் ல்வீவ் (Lviv) நகரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு அலங்கரிக்கப்பட்ட வாத்து முட்டையே இவ்வாறு உலகின் மிகப் பழமையான “pysanka” (ஈஸ்டர் முட்டை) என்று அறிவிக்கப்பட்டது.

இது 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

 வீடு புதுப்பிப்பு

2013 ஆம் ஆண்டு ல்வீவ் நகரில் ஒரு வீடு புதுப்பிப்பு பணியின் போது பழமையான கிணறு ஒன்று தெரியவந்துள்ளது.

அந்தக் கிணற்றின் அடியில், எரிந்த கரி, களிமண் பாத்திரங்கள், உலோக பொருட்கள் மற்றும் தோல் பாவனைகளுடன் இந்த பைசாங்கா முட்டையும் சிக்கியுள்ளது.

1527 ஆம் ஆண்டு ல்வீவ் நகரத்தில் ஏற்பட்ட பெரும் தீவிபத்திற்குப் பிறகு, சுத்தம் செய்யும் பணியின் போது இந்த முட்டை கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைனிய மொழி

பைசாங்கா என்பது உக்ரைனிய மொழியில் “எழுதிய முட்டை” என்பதைக் குறிக்கின்ற நிலையில், இது மெழுகு கலை (wax-resist) தொழில்நுட்பத்தின் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 -ஆம் ஆண்டு, யுனெஸ்கோ இந்த பைசாங்கா அலங்கரிப்பு கலையை intangible (தொட்டுணர முடியாதது) உலக கலாச்சாரப் பாரம்பரியமாக அறிவித்துள்ளது.

தற்போது இந்த உலகின் பழமையான ஈஸ்டர் முட்டை கொலோமியாவிலுள்ள பைசாங்கா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version