பங்களாதேஷில்(Bangladesh) தங்களது உரிமைக்காக போராடும் நிலையில், தற்போதைய இடைக்கால முகமது யூனுஸ் டாக்காவில் உள்ள புகழ் வாய்ந்த தாகேஷ்வரி கோவிலுக்கு சென்றுள்ளார்.
பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததை தொடர்ந்து
கடந்த 5ஆம் திகதி
ஷேக் ஹசீனா(Sheikh Hasina )பதவியிலிருந்து விலகினார்.
அதனை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளை நாசப்படுத்த தொடங்கிதோடு ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்களுக்கு சொந்தமான இடங்களை தீவைத்து கொளுத்தினர்.
இடைக்கால அரசு
சிறும்பான்மை இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பு கேட்டு இந்துக்களும் போராட்டத்தில் குதித்தனர்.
ஷேக் ஹசீனா பதவி விலகி ஒரு வாரத்திற்கும் மேலாகியும் வன்முறை முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையே நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்(Muhammad Yunus) தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முகமது யூனுஸ் டாக்காவில் உள்ள புகழ் வாய்ந்த தாகேஷ்வரி கோவிலுக்கு சென்றுள்ளார்.
இந்துக்களின் உரிமை
பின்னர் “உரிமைகள் அனைவருக்கும் சமமானது. வங்காளதேசத்தில் உள்ள சிறும்பான்மையினத்தவருக்கும் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கப்படும்.
மேலும், நாம் அனைவரும் ஒரே உரிமை கொண்ட மக்கள். நமக்குள் எந்த வேறுபாட்டையும் காட்ட வேண்டாம்.
தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்.
பொறுமையை கடைப்பிடிக்கவும், எங்களால் என்ன செய்ய முடிந்தது மற்றும் செய்யவில்லை என்பது குறித்து பின்னர் தீர்ப்பளிக்கவும்.
தோல்வியடைந்தால், எங்களை விமர்சியுங்கள்”என குறிப்பிட்டுள்ளார்.