முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையர்களின் பணத்தைச் சூறையாடும் சர்வதேச இணையக் கும்பல்!

சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் வாயிலாக இலங்கையர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் மிகப்பெரிய அளவிலான திட்டமிட்ட இணையவழிப் பண மோசடியை இலங்கை கணினி அவசர கால பதிலளிப்புக் குழு  கண்டறிந்துள்ளது.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட தீவிர புலனாய்வு மற்றும் தரவுச் சேகரிப்புகளின் அடிப்படையில், இந்தச் சர்வதேசச் சதி நடவடிக்கைகள் இந்தியாவிலிருந்தே ஒருங்கிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுவதாக CERT அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

மோசடிக்காரர்கள் தாங்கள் ஏமாற்ற நினைக்கும் நபர்களைப் பற்றிய தகவல்களை முன்கூட்டியே மிகத் துல்லியமாகச் சேகரிக்கின்றனர்.

நம்பிக்கையை ஏற்படுத்துதல்: இலக்கு வைக்கப்படும் நபர்களின் உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் சமூக வலைத்தளக் கணக்குகளைத் தொடர்புகொண்டு, தங்களை நண்பர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்கின்றனர்.

நெருங்கியவர்கள் போல நடித்து, அவசரத் தேவை என்ற போர்வையில் அல்லது போலியான முதலீட்டு வாய்ப்புகளைக் காட்டி பணத்தை ஏமாற்றிப் பறிக்கின்றனர்.

எனவே, அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து சமூக வலைத்தளங்களில் வரும் கணக்கு அழைப்புகள்  மற்றும் குறுஞ்செய்திகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும், பணப் பரிமாற்றங்களைச் செய்வதற்கு முன் உரிய நபரை நேரடியாகத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Source: https://samugammedia.com/international-online-gang-plundering-the-money-of-sri-lankans-1786200552

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்