நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்கு வைத்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, கிண்ணியா ரீ.பி.ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று இன்றைய தினம் (18) மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எஸ். ரீ. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவிகளினால் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடாத்தப்பட்டதுடன், பாடசாலை சூழலை அண்மித்த வீடுகளில் டெங்கு பரிசோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி (MOH) எம். ஏ. எம். அஜித் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அத்துடன், பிரதேச சுகாதார பரிசோதகர்கள் (PHI), டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

