முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கைது அச்சத்தில் பொதிகளை கைவிட்டு தப்பிய பயணி? கோடி ரூபாய் குஷ் சிக்கியது! – கட்டுநாயக்கில் அதிர்ச்சி சம்பவம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் 32 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையொன்று விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் 6ஆம் இலக்க பயணப் பொதி பாதை அருகே கைவிடப்பட்டிருந்த இரண்டு பயணப் பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்தப் பொதிகளுக்குள் குஷ் போதைப்பொருள் 60 பாக்கெட்டுகளில் காற்று புகாத வகையில் பொதி செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த போதைப்பொருள் நேற்று (14) தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL-405 விமானத்தில் பயணித்த ஒருவரால் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விமான நிலையத்திற்குள் வைத்து கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில், குறித்த பயணி பயணப் பொதிகளை கைவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த பயணப் பொதிகளை கொண்டு வந்தவர் யார் என்பதை கண்டறியும் நோக்கில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் தொகை இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/a-passenger-who-escaped-after-leaving-the-packages-in-the-bus-crores-of-rupees-worth-of-kush-got-caught–shocking-incident-in-kattunayaka-1789449063

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.