முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

க்ளோபல் ஸ்ரீலங்கன் குமர குமாரி 2026’ – ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போட்டியாளர்கள் வெற்றி

உலகின் தனித்துவமான கலாச்சார அழகுப்போட்டிகளில் ஒன்றான ‘க்ளோபல் ஸ்ரீலங்கன் குமர குமாரி 2026’ போட்டியின் இறுதிச்சுற்று மொறட்டுவை ரமாடியா கிராண்ட் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான பிரிவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குலன் திஸாநாயக்கவும், பெண்களுக்கான பிரிவில் பிரான்ஸைச் சேர்ந்த சினாதி லியனகேவும் வெற்றியாளர்களாக மகுடம் சூடினர்.

13 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி, இலங்கையின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் திறமைகளை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தும் முக்கிய தளமாக அமைந்தது.

போட்டியின் முதன்மை அனுசரணையாளரான கண்டி ஸ்பைசஸ் அக்ரோ (தனியார்) நிறுவனத்தின் தலைவரும், கண்டி குழுமத்தின் முகாமைத்துவ இயக்குநருமான கலாநிதி ருவன் ஹேரத் தெரிவிக்கையில், இலங்கையின் செழுமையான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா சாத்தியக்கூறுகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதே இப்போட்டியின் முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

மேலும், சுற்றுலாத்துறையின் ஊடாக இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டுவதுடன், உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் போட்டியாளர்களை ஈர்க்கும் இப்போட்டியின் மூலம், இலங்கையை சிறந்த சுற்றுலாத்தலமாக சர்வதேச ரீதியில் விளம்பரப்படுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவித்த ரமாடியா ஹோட்டல் மற்றும் ரொதேஷா குழுமத்தின் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ, இப்போட்டி மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

சர்வதேச அளவிலான மாநாடுகள், நிகழ்வுகள் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தக்கூடிய முன்னணி இடமாக ரமாடியா ஹோட்டல் உருவெடுத்துள்ளதை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, போட்டியின் நிறுவனரும் சர்வதேச இயக்குநருமான வசந்தி குணரத்ன தெரிவிக்கையில், 13 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இப்போட்டியில் பங்கேற்றதாகக் குறிப்பிட்டார்.

மிக உயர்ந்த தரத்தில் நடைபெற்ற இப்போட்டி, இலங்கையின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் திறமைகளை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்துவதற்கான சிறந்த தளமாக அமைந்துள்ளதாகவும், உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களை ஒன்றிணைத்து தேசிய அடையாளத்தை உலகளவில் உயர்த்துவதற்கும் இப்போட்டி வழிவகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/global-sri-lankan-kumari-kumari-2026–australia-and-france-contestants-win-1786185117

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.