முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சலேவுக்குச் சித்திரவதை என்பது முற்றிலும் பொய்; ஆதாரங்களுடன் சூத்திரதாரி விரைவில் பிடிபடுவார்! பாதுகாப்பு அமைச்சர் பகிரங்கம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்து தற்போதைய அரசால் மீண்டும் விசாரணைகள் நடத்தப்படுவது எவ்விதமான அரசியல் பழிவாங்கல் நோக்கங்களுக்காகவும் அல்ல என்றும், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே சிறைச்சாலையில் உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார் என்று வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரசின் புதிய விசாரணைகள் மற்றும் சிறைச்சாலை நிலவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு விசேட விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேவுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சட்டதிட்டங்களுக்கு அமைய முறையாகச் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய பின்னணியில், அவர் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் வெறும் போலி வதந்திகளாகும்.

அவருக்கு அண்மையில் பல் மற்றும் கண் தொடர்பான மருத்துவப் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, அதற்கான முறையான மருத்துவச் சிகிச்சைகள் உடனடியாக அரச மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளன. அவர் துன்புறுத்தப்படுவதாக இருந்தால் ஏன் உடனடியாக மருத்துவசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழ வேண்டும். அதுமட்டுமன்றி, அவரது குடும்பத்தினர் அவரை நேரில் சந்திப்பதற்கும், வீட்டிலிருந்து சமைத்த உணவைக் கொண்டு வந்து கொடுப்பதற்கும் முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரியைக் கண்டறிவதே இந்த மறுவிசாரணையின் பிரதான நோக்கமாகும்.

இந்தத் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலையீடு காணப்படுவதாகச் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற போதிலும், இது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இன்னும் விரிவான புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன  – என்றார்.

Source: https://samugammedia.com/the-claim-that-salev-is-having-a-stroke-is-completely-false-with-evidence-the-source-will-soon-be-caught-the-minister-of-security-openly-said-1781499865

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.