கண்டி – தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி விழுந்து இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை நேரம் நிறைவடைந்த பின்னர், ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றுள்ளனர்.
இதன்போது, நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள கற்பாறையில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சித்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கற்பாறையிலிருந்து தவறி கீழே விழுந்ததில், ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய மாணவன் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக மடுல்கலை மற்றும் கட்டுகஸ்தோட்ட வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://samugammedia.com/two-kids-who-went-to-the-waterfall-with-friends-died-1784734880

