முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டில் டெங்கு பாதிப்பு தீவிரம் 89,639 பேர் பாதிப்பு, 65 பேர் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 89,639 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. 

மாதாந்தத் தரவுகளின்படி, ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அம்மா மாதத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 29,973 ஆகும். 

இதற்கு மேலதிகமாக ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜனவரி மாதத்தில் 7,866 நோயாளர்களும், மார்ச் மாதத்தில் 6,013 நோயாளர்களும், பெப்ரவரி மாதத்தில் 5,721 நோயாளர்களும் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 5,651 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

ஓகஸ்ட் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் 4,292 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

நாட்டின் மாகாணங்களில் மேல் மாகாணத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மொத்த நோயாளர்களில் 52.93 சதவீதமான, அதாவது 47,445 நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளனர். 

இதற்கு மேலதிகமாக தென் மாகாணத்தில் 13,302 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 7,971 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,383 நோயாளர்களும், வடமேல் மாகாணத்தில் 4,465 நோயாளர்களும், கிழக்கு மாகாணத்தில் 3,703 நோயாளர்களும், ஊவா மாகாணத்தில் 2,482 நோயாளர்களும், வடமத்திய மாகாணத்தில் 1,574 நோயாளர்களும் மற்றும் வட மாகாணத்தில் 1,314 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

மாவட்ட மட்டத்தில் பார்க்கும் போது, கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது மொத்த நோயாளர்களில் 21.27 சதவீதமாகும். 

கொழும்பு மாவட்டத்தில் 17,765 நோயாளர்களும், கண்டியில் 6,366 நோயாளர்களும், மாத்தறையில் 5,953 நோயாளர்களும், களுத்துறையில் 5,841 நோயாளர்களும், காலியில் 4,936 நோயாளர்களும், இரத்தினபுரியில் 4,860 நோயாளர்களும் மற்றும் கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசத்தில் 3,613 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

தற்போது உயிரிழப்பு விகிதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், நாடு முழுவதும் மேலும் 119 வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிஅபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Source: https://samugammedia.com/severe-dengue-outbreak-in-the-country-89639-cases-65-deaths-1786337845

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.