முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடுகள் – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் தணிக்கைக் குழுவொன்றை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2023 முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலகங்களில் இந்தத் தணிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறிப்பாக, நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் அஸ்வெசும நலன்புரித் திட்ட பயனாளிகள் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பேரிடர் நிதி, கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு சமுர்த்தி திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட 5,000 ரூபாய் உதவித்தொகை, சமுர்த்தி பயனாளிகளுக்கான அரசாங்க மானியங்கள் மற்றும் முதியோர் உதவித்தொகைகள் ஆகியவை உரிய பயனாளிகளுக்கு முறையாக வழங்கப்பட்டனவா என்பதும் தணிக்கையின் ஊடாக ஆராயப்படவுள்ளது.

தணிக்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், இதுதொடர்பில் தங்களிடம் ஏதேனும் தகவல்கள் அல்லது ஆதாரங்கள் இருந்தால் அவற்றை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source: https://samugammedia.com/financial-irregularities-in-nuwara-eliya-district-offices—president-takes-shock-action-1786875756

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.