முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பழம்பாசி விவசாயிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்தார் ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையப் பிரிவுக்குட்பட்ட பழம்பாசி கமக்கார அமைப்புப் பகுதிக்கு நேரில் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி விவசாயிகளின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்துகொண்டார்.

பழம்பாசி கமக்கார அமைப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக நடைபெற்ற இந்தக் கள விஜயத்தில், வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கும் விவசாயக் காணிகளை விடுவித்தல், தித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட குளங்களைச் சீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் நீண்டகாலமாக கைவிடப்பட்ட நிலையில் உள்ள குளங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, விளாப்புக்குளம் மற்றும் அதன்கீழ் உள்ள 21 விவசாயிகளுக்குச் சொந்தமான 61 ஏக்கர் காணிகளுக்கு வனவளத் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் இடப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அதேபோன்று, மதகுவைத்த குளத்தின் கீழ் உள்ள 7 விவசாயிகளுக்குச் சொந்தமான 29 ஏக்கர் காணிகளும் வனவளத் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் இடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் முறையிட்டனர்.

தமது கமக்கார அமைப்புப் பிரிவுக்குள் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குளங்கள் மற்றும் விவசாயக் காணிகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, கடந்த தித்வா பேரிடரின்போது உடைப்பெடுத்த தவசிகுளம் இதுவரை சீரமைக்கப்படவில்லை என விவசாயிகள் சுட்டிக்காட்டினர். 

குறித்த குளத்தை விரைவாக சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், பழம்பாசி கமக்கார அமைப்புப் பிரிவுக்குட்பட்ட மணியர்குளம், மதகுவைச்சகுளம் மற்றும் பழைய பழம்பாசிக்குளம் ஆகிய குளங்கள் நீண்டகாலத்திற்கு முன்னர் ஏற்பட்ட அனர்த்தங்களின்போது உடைப்பெடுத்த போதிலும், இதுவரை முறையாகச் சீரமைக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால், நீண்டகாலமாக கைவிடப்பட்ட நிலையில் உள்ள இந்தக் குளங்களையும் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

விவசாயிகளின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் விளாப்புக்குளத்தின் கீழான விவசாயக் காணிகளையும், தித்வா பேரிடரின்போது உடைப்பெடுத்து இதுவரை சீரமைக்கப்படாத தவசிகுளத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்தப் பிரச்சினைகளை எதிர்வரும் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் தாம் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு மற்றும் கள விஜயத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராசாரத்தினம் கிரிதரனும் பங்கேற்றிருந்தார்.

Source: https://samugammedia.com/ravikaran-mp-personally-heard-the-grievances-of-palamappasi-farmers-1788503650

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.