முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த அழைப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகர காரியவசம், தான் தெரிவிக்காத விடயங்களைத் திரித்து தவறான அர்த்தங்களை வழங்கி, அரசாங்கம் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

தான் கூறிய கருத்துகளைத் திரிபுபடுத்தி காண்பிப்பதன் மூலம் எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் இதுபோன்ற அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்ட உலகத் தலைவர்களுக்கு இறுதியில் துரதிர்ஷ்டவசமான நிலையே ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அதே பாதையில் பயணிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

அத்துடன், ஷானி அபேசேகரவை பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமித்ததும் இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு எதேச்சதிகாரமாக செயற்பட்டதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து மக்கள் சரியான புரிதலுடன் இருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்கள் இதற்கு உரிய பதிலை வழங்குவார்கள் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/controversial-opinion-about-police-chief-sagar-called-for-questioning-1786336895

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.