முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மணல் கடத்தல் குழுவை பிடிக்க சென்றபோது விபரீதம் – ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட STF வீரர்

திருகோணமலை – சேருநுவர, சூரியபுர விசேட அதிரடிப்படை (STF) முகாமில் கடமையாற்றி வந்த விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

அவரைத் தேடும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இன்று அதிகாலை வேளையில், கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை முடக்குச்செட்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபடும் குழுவினரை மடக்கிப் பிடிப்பதற்காக சூரியபுர விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து விசேட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

இதன்போது, கங்கை ஆற்றைக் கடந்து செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

இவ்வனர்த்தத்தில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர் சூரியபுர விசேட அதிரடிப்படை முகாமில் பணிபுரியும் 41 வயதுடைய கங்குவல்ல பிரதேசத்தை சேர்ந்த சார்ஜன் திஹான்  என்ற பொலிஸ் அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆற்றின் நீர் ஓட்டம் காரணமாக அவர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரை மீட்பதற்காக கடற்படையினர் வரவழைக்கப்பட்டு தற்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/tragedy-struck-when-trying-to-catch-a-sand-smuggling-gang–stf-officer-swept-away-in-the-river-1783923230

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.