நடிகர் அஜித்
அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அஜித் தற்போது விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு விரைவில் அசர்பைஜான் நாட்டில் தொடங்கவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கிறார்.
படத்திற்கான அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
வாய்ப்பே இல்லை
விஜய்யின் சூப்பர் ஹிட் படமான கில்லி பல வருடங்களுக்கு ரீ-ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டிவரும் நிலையில் அஜித்தின் அந்த படம் ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்.
சன் டிவியின் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்- எந்த தொடர்கள் தெரியுமா, முழு விவரம்
அது வேறு எந்த படமும் இல்லை மங்காத்தா தான். அஜித் நடிப்பில் மங்காத்தா படம் வருகிற மே 1 அஜித் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் படமாக ரீரிலிஸ் ஆகவிருந்தது.
ஆனால், தற்போது கிடைத்த தகவல் படி அப்படம் அந்த நாளில் ரிலிஸாக வாய்ப்பு இல்லையாம்.,
ஏனெனில் அப்படத்தின் தயாரிப்பாளர் உடல்நலம் முடியாமல் மருத்துவமனையில் இருக்க இந்த நேரத்தில் அந்த படத்தை ரீரிலிஸ் செய்வார்களா என்ற கேள்விக்குறி உருவாகியுள்ளது.