முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜேவிபியின் கோர முகம் வெளி வருகிறது: கடுமையாக சாடும் தமிழ் வேட்பாளர்

ஜேவிபியின் (JVP) கடந்த கால கோர முகங்கள் வெளி வரும் நிலையில் தமிழ் மக்கள்
சிந்தித்து செயல்பட வேண்டுமென ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனநாயக தமிழ்
தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆனைக்கோட்டை (Anaikoddai) – சாவல்கட்டுப் பகுதியில் நேற்றைய தினம் (30.10.2024) இடம்பெற்ற ஜனநாயக தமிழ்
தேசிய கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு
உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என ஜேவிபியான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அனுர மக்களுக்கு வழங்கிய ஆணையை ஆட்சி
பீடம் ஏறியதும் மறந்து விட்டார்கள்.

24 மணித்தியாலத்திற்குள் கைது

மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என கூறியவர்கள் மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் ஜே வி பியின் பழைய கோர முகங்களை காட்ட ஆரம்பித்து விட்டனர்.

 ஜேவிபியின் கோர முகம் வெளி வருகிறது: கடுமையாக சாடும் தமிழ் வேட்பாளர் | Tamil People Should Think Abut Jvp Past

தற்போதைய ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க பயங்கரவாத தடைச் சட்டத்தை
ஒழிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளராக பிரச்சாரக் கூட்டங்களில் உறுதி மொழிகளை
வழங்கிய நிலையில் தற்போது அவரது அமைச்சரவையில் உள்ள ஒருவர் பயங்கரவாத தடைச்
சட்டத்தை நீக்க முடியாது என கூறுகிறார்.

இலஞ்சம் ஊழல்களை ஒழிப்போம் கடந்த கால பாரிய ஊழல் மோசடியின மத்திய வங்கி
பினைமுறி மோசடிக்காரர்களை ஆட்சிக்கு வந்ததும் 24 மணித்தியாலத்திற்குள் கைது
செய்வோம் என கூறியவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் கைது
செய்யவில்லை.

தற்போது பாராளுமன்ற தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் பிணைமுறை மோசடி உயிர்த்த
ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கண்துடைப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே உயிர்ந்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று முடிந்த
நிலையில் அதன் அறிக்கைகளை வெளியிடாமல் புதிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மக்களின் ஆதரவு இன்றி ஜனாதிபதியாக தெரிவு

ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அனுரா குமார திசாநாயக்க
பெரும்பான்மை மக்களின் ஆதரவு இன்றி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள
நிலையில் அவர் வாக்களித்த மக்களுக்கு வழங்கிய ஆணைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஜேவிபியின் கோர முகம் வெளி வருகிறது: கடுமையாக சாடும் தமிழ் வேட்பாளர் | Tamil People Should Think Abut Jvp Past

தமிழ் மக்களுகு ஜேவிபி செய்த கொடூரங்களை இன்னும் மக்கள் மனங்களில் இருக்கின்ற
நிலையில் மாற்றம் என்ற போர்வையில் தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது.

தமிழ் மக்கள் தமது அரசியல் தீர்வுக்காக போராடி வரும் நிலையில் ஜேவிபியான தேசிய
மக்கள் சக்தியின் தேர்தல் கால பொய் வாக்குறுதிகளுக்கு எடுபட மாட்டார்கள்.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றம் அரசியல் நீதியான மாற்றமே தவிர தெற்கு
அரசியலில் ஏற்பட்ட மாற்றமல்ல.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகின்ற நிலையில் தெற்கில் இருந்தும்
வடக்கில் இருந்தும் தெற்கு விசுவாசிகள் பலர் வருவார்கள் பலதைக் கூறுவார்கள்
எவராலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

ஆகவே தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துடன் பயணிக்கின்றவர்கள் என்பதை தெற்கக்கும்
சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்டுவதற்காக தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்துவதன் மூலம் வெளிக் காட்ட
முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.