ஆழிப்பேரலை மற்றும் டிட்வா சூறாவளி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சமய வழிபாடுகள், பிராத்தனைகளில் ஈடுபட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில், இன்றைய தினம்(26) தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இந்த அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அவர் இந்த பிரார்த்தனைகளை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட பிரார்த்தனை
சமய வழிபாடுகளின் பின்னர், நாமல் ராஜபக்ச தனது சமூக வலைத்தள பக்கத்தில் “நாட்டையே உலுக்கிய ஆழிப்பேரலை ஏற்பட்டு 21 ஆண்டுகள் நிறைவடையும் இன்றைய நாளில், அந்த அனர்த்தத்தினால் எம்மிடமிருந்து விடைபெற்று சென்ற அன்பிற்குரிய மக்களை மிகுந்த சோகத்துடன் நினைவு கூர்ந்தேன்.

அதேபோன்று, அண்மைய அனர்த்த நிலைமைகள் காரணமாக உயிரிழந்த மக்களையும் மனவேதனையுடன் நினைவு கூர்ந்தேன்.
அத்துடன் இயற்கைச் சீற்றங்களுக்கு மத்தியில் நாம் ஒரு தேசமாக மீண்டும் எழுந்து நின்றோம். எத்தனை தடைகள் ஏற்பட்டாலும், பாரிய அபிவிருத்திகள் ஊடாக இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பினோம். இனிவரும் காலங்களில் இத்தகைய பேரழிவுகள் மீண்டும் ஏற்படக் கூடாது எனப் பிரார்த்திக்கின்றேன்!” என பதிவிட்டுள்ளார்.
Today marks 21 years since the devastating #tsunami that shook our nation. I remember with deep respect and sorrow the precious lives we lost on that tragic day.
In the face of immense adversity, we stood together as one nation, rebuilding our country with resilience and…
— Namal Rajapaksa (@RajapaksaNamal) December 26, 2025

