Home இலங்கை அரசியல் யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்தி – எஸ்.ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை

யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்தி – எஸ்.ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை

0
யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்தி – எஸ்.ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தில், விரிவான அபிவிருத்தி
அவசியம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தில் முதற்கட்ட அபிவிருத்தி
மட்டும் தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

முதற்கட்ட அபிவிருத்தி

ஓடுதளத்தை முழுமையாகச் சீரமைத்தால் மட்டுமே கணிசமான பயன்களைப்
பெற முடியும்.

யாழ். பலாலி விமான நிலைய அபிவிருத்தி - எஸ்.ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை | Development Project At The Jaffna Palaly Airport

ஓடுதளத்தை விரிவாக்கினால் 320,321 விமானங்கள் வந்து இறங்க கூடிய
நிலைமை உருவாகும்.

இது வடக்கின் அபிவிருத்தியிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் இந்தியா இன்னும் ஆழமாக
ஆலோசித்து தீர்மானம் எடுக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது கூறியுள்ளார்.